நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) இன்று (22) காலை 6:00 மணிக்கு இந்த அவசர எச்சரிக்கையை உத்தியோகபூர்வமாகப் பிறப்பித்துள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
அபாய எச்சரிக்கை விபரங்கள்:
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- 🔴 மூன்றாம் நிலை (சிவப்பு) அபாய எச்சரிக்கை: கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- 🟠 இரண்டாம் நிலை (அம்பர்) அபாய எச்சரிக்கை: * கொழும்பு மாவட்டம்: சீதாவாக்க, பாதுக்கை
- கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
- இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, பெல்மதுல்ல
- கேகாலை மாவட்டம்: ருவான்வெல்ல
- களுத்துறை மாவட்டம்: இங்கிரிய, புளத்சிங்கள
- 🟡 முதலாம் நிலை (மஞ்சள்) அபாய எச்சரிக்கை: * இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, நிவித்திகல, களுவானை
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
- கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மலைப்பாங்கான மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




