உள்ளூர்

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரான வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link