கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
- ஆரம்பமாகும் நேரம்: இன்று (மே 27) இரவு 07.00 மணி
- நிறைவடையும் நேரம்: நாளை (மே 28) முற்பகல் 07.00 மணி
மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றம் செய்யும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
எனவே, குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




