2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் (A/L) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
இதனுடன், உயர்தரப் பரீட்சைக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணையும் (Timetable) பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் மேலதிக விபரங்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

