உள்ளூர்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அதிரடி அனுமதி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை (Strategic Review and Restructuring) அவசரமாக முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் புதிய உயர்மட்டக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பரந்த பேரினப் பொருளாதார சூழலின் முன்னோக்குகளைக் கருத்திற் கொண்டு, தேசிய விமான சேவை நிறுவனத்தில் விரிவான மூலோபாய மீளாய்வை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் அவசர முன்னுரிமையாகும் என கண்டறியப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தலைவராகச் செயற்படும் இக்குழுவில் பின்வரும் துறைசார் நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:

  • கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய (தலைவர்) – டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்.
  • துமிந்த ஹுலங்கமுவ – ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்.
  • தேஷால் த மெல் – நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர்.
  • துமித் பெர்னாண்டோ – பரிவர்த்தனை மற்றும் முதலீட்டு வங்கியியல், ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நிபுணர்.
  • நிதி அமைச்சின் செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர்.
  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பிரதிநிதி / பிரதிநிதிகள்.
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர்.
  • நிறுவனம், விமான சேவைகள் மற்றும் பொதுச் சட்டம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிபுணர்கள்.
  • விமான சேவைகள் தொழிற்துறை நிபுணர்கள்.

இந்த மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பின் முக்கிய நோக்கம், அரசாங்கத்தின் மீதான நீண்டகால நிதிச் சுமையைக் குறைப்பதாகும். அதன் மூலம் நிதி ரீதியாக நிலைபேறான மற்றும் வணிக ரீதியாகச் செயற்திறனான ஒரு தேசிய விமான சேவையை இந்நாட்டில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும்.

இப்பணிகளில் பரிவர்த்தனை ஆலோசகராக (Transaction Advisor) செயற்படும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்துடன் (International Finance Corporation – IFC) இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்காகவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்கான விசேட குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link