உள்ளூர்

“செங்கோலைத் தூக்கி ஓடினாலும், விழுங்கினாலும் வழக்குகள் குறையாது” – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி!

“செங்கோலைத் தூக்கி ஓடினாலும் சரி, விழுங்கினாலும் சரி.. வழக்குகள், தீர்ப்புகளின் வேகம் குறையாது!” நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி முழக்கம்!

செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும் சரி, அதை விழுங்கினாலும் சரி, வழக்குகள் விசாரிக்கப்படும் வேகமும் குறையாது, தீர்ப்புகள் வழங்கப்படும் வேகமும் குறையாது என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதை விட இந்த அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வேறு எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே நீதியமைச்சர் இவ்வாறு ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “எதிர்க்கட்சியினர் இப்போது பயத்தாலும் பீதியாலும் நடுங்கி சத்தம் போடுவது சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக அல்ல. மாறாகத் தற்போது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எப்படி நிறுத்துவது என்ற நோக்கிலேயே இவர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனால், தங்களால் இயன்ற அனைத்து சேறு பூசல்களையும் செய்கிறார்கள். இன்று பாராளுமன்றத்துக்குள்ளும் நாம் இதனைப் பார்த்தோம். நாம் மாற்ற நினைக்கும், மாறாத இந்த பழைய பாராளுமன்ற அரசியல் கலாசாரத்தையே இந்த எதிர்க்கட்சி தற்போதும் பிரதிபலிக்கிறது” என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடப் பார்த்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், “எனக்குச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. நீங்கள் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும் சரி, அதை விழுங்கினாலும் சரி, வழக்குகள் விசாரிக்கப்படும் வேகமும் குறையாது, தீர்ப்புகள் வழங்கப்படும் வேகமும் குறையாது” என எச்சரித்தார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிக்கப்படுகிறதா என்பது குறித்து சபையில் விளக்கிய நீதியமைச்சர், “ஆம், அதுகுறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெறுகிறது. இறுதி முடிவை எடுத்து, நாம் அதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். அதேபோல், இது ஒரு தனிப்பட்ட நீதிபதிக்கான வயது நீடிப்பு அல்ல, ஒட்டுமொத்த நீதித்துறை சமூகத்திற்குமான மாற்றத்தையே நாம் செய்யவுள்ளோம். அதனால், அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். தேவையான நேரத்தில் அதற்குரிய விவரங்களை நாம் பாராளுமன்றத்துக்குள் அறிவிப்போம்” எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கை குறித்து மேலும் விளக்கிய அவர், “சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதை விட இந்த அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வேறு எதுவும் இல்லை. தம்மீதான சட்ட நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியினருக்குப் பயம் வருவது நியாயமானது, கோபம் வருவது நியாயமானது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும். யாருடனும் எங்களுக்குத் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link