உள்ளூர்

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான சந்தை வீதியில், 16 வயதுடைய சிறுவன் ஒருவனால் விபரீதமான முறையில் செலுத்தப்பட்ட சிற்றூர்தி (Van) ஒன்று மோதி, வீதியோரக் கடைகள் மற்றும் மின் கம்பங்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

விபத்துக்குள்ளான சிற்றூர்தியானது வழக்கமாகச் சந்தைக்கு மரக்கறிப் பண்டங்களை ஏற்றி வரும் வாகனமாகும். இன்று (27) வழமை போல் வந்திருந்த போது, அதன் சாரதி வேலைப்பளு காரணமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட 16 வயதுடைய சிறுவன், வாகனத்தின் சாவியைத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு சிற்றூர்தியை இயக்கிச் சென்றுள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

சிறுவனுக்குப் போதிய வாகனப் பயிற்சி இல்லாததால், பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி, வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சமிஞ்சை (சிக்னல்) கம்பம், நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் மற்றும் பல கடைகளின் பொருட்களை அடுத்தடுத்து மோதித் தள்ளியது. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய 16 வயதுச் சிறுவன், உடனடியாக அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து சரணடைந்துள்ளார்.

இது குறித்துப் பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, தனக்குத் தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்துக்கொண்டு திருட்டுத்தனமாகச் சிற்றூர்தியை ஓட்டிச் சென்றுள்ளதாக அதன் சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link