உள்ளூர் கல்வி

க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய முக்கியஅறிவிப்பு

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை கடந்த 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்:

  • பாடசாலை விண்ணப்பதாரிகள்: தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதற்கான விசேட அறிவுறுத்தல்கள் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
  • தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் (Private Candidates): தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள், தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளாமை பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது என்பதைப் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது: திணைக்களத்தின் ஊடக வெளியீட்டுக்கு அமைய, அனைத்து விண்ணப்பதாரிகளும் வரும் 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். அதேவேளை, எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link