இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைக் குறிப்பிடுவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 2026 டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்று தயாராக வைத்திருக்க அறிவுறுத்துமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களின் தேசிய அடையாள அட்டைகளை தயாராக வைத்திருப்பதை உறுதி செய்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பொறுப்பாகும் என திணைக்களம் விசேடமாக வலியுறுத்தியத்துள்ளது
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்




