உள்ளூர்

இலங்கை – ஜப்பான் கடற்றொழில் பேச்சுவார்த்தை வெற்றி: பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
  • இலங்கையின் கடல் உணவு பெறுமதி சங்கிலியை (Seafood Value Chain) மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிடமிருந்து தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
  • ஜப்பானிய சந்தையில் இலங்கையின் கடல் உணவுகளுக்கான தேவையை மேலும் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
  • இலங்கையின் கடற்றொழில் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கி, உலகளாவிய தரத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்தக் கலந்துரையாடலின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்தத் திட்டத்தை எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை சார்ந்த பிரிவுகள் மற்றும் தூதரகம் ஊடாக ஒருங்கிணைத்து, விரைவாகச் செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது தீர்மானம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link