உள்ளூர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுரேஷ் சலே; அதிரடிப்படை மற்றும் CID குழுக்கள் குவிப்புடன் விசேட பாதுகாப்பு தீவிரம்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சுரேஷ் சலேயின் பாதுகாப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்றும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்போது விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இதுவரையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

தடுப்புக் காவலில் இருந்த போது தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள்ளேயே அண்மையில் உணவு தவிர்ப்புப் (உண்ணாவிரதம்) போராட்டத்தை மேற்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவினால் சுரேஷ் சலே இன்றிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link