நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.
இந்த விலை திருத்தத்தின் பிரகாரம், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலை அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன:
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீட்டர் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீட்டர் 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு:
- சூப்பர் டீசல்: ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- சாதாரண டீசல்: ஒரு லீட்டர் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் விநியோக ஒழுங்கமைப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அவசர விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.




