பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த சுமார் 191 கிலோகிராம் போதைப்பொருட்கள் மற்றும் 3,482 போதை வில்லைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக எரித்து அழிக்கப்பட்டன.
புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள லக்டோவத்த பகுதியில் உள்ள விசேட எரிப்பு உலையில் வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்கள்:
| போதைப்பொருள் வகை | அளவு |
| ஹெரோயின் | 40 கிலோ 539 கிராம் |
| கெத்தமீன் (Ketamine) | 132 கிலோ 79 கிராம் |
| பலப்பிட்டிய நீதிமன்ற ஹெரோயின் | 19 கிலோ |
| கொகேன் | 55 கிராம் |
| போதை வில்லைகள் | 3,482 மாத்திரைகள் |


