உள்ளூர்

செம்மணி 3ஆம் கட்ட அகழ்வின் 26ஆவது நாள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) செம்மணி பகுதிக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த விசேட குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, நீதிமன்ற அனுமதியைக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாண நீதிமன்றில் அவசர நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாளைய தினம் புதன்கிழமை (17) இவ்வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டு, நீதி அமைச்சரின் குழுவினரை அகழ்வுத் தளத்திற்குள் அனுமதிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தலை நீதிமன்றம் அறிவிக்கும் எனச் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அமைச்சர் தலைமையிலான இக்குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட பிரநிதிகள் குழுவொன்றும் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இன்றைய அகழ்வில் அதிர்ச்சி விபரங்கள்: இதேவேளை, செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 26ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (16) பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய அகழ்வுப் பணியின் போது, 2 சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் உடற்பாகங்கள் உட்பட மேலும் 06 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

விசேட சான்றுப் பொருளாக, இன்றைய தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் இடுப்புப் பகுதியில் இருந்து இரண்டு நாணயங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, ஒட்டுமொத்தமாக 366 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link