உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை! கடல் அலைகள் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் எதிர்வுகூறியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், சாதாரண காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுக் கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link