உள்ளூர்

நீர்கொழும்பு சிறைச்சாலை நிலவரம் குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் முற்றிலும் கட்டுக்குள் வந்தது! கைதிகள் குழுக்கள் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க அறிவிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று மதியம் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்ற நிலைமை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதுகுறித்து உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கையில், மோதலில் ஈடுபட்ட இரு கைதிகள் குழுக்களுக்கிடையேயும் சமரசம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது சிறைச்சாலையின் உள்ளக நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

முன்னதாக போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையைக் சீர்செய்வதற்காகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அவசரமாக அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது வன்முறைகள் தணிக்கப்பட்டு, சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link