உள்ளூர்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடியாகக் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாகக் குறைப்பு! புதிய விலை விபரங்கள் இதோ!

சந்தையில் விற்பனை செய்யப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் (Litro Gas) விலைகளை இன்று (03) நள்ளிரவு முதல் கணிசமான அளவு குறைக்க லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

உலகச் சந்தை எரிவாயு விலை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:

  • 12.5 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை காலம் 4,765 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,465 ரூபாய் ஆகும்.
  • 5 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை காலம் 1,910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1,792 ரூபாய் ஆகும்.
  • 2.3 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 835 ரூபாய் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அதிரடி விலை குறைப்பானது இன்று (03) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link