உள்ளூர்

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி

‘அஸ்வெசும’ பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு இன்று நிதியொதுக்கீடு! 1.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு 11.83 பில்லியன் ரூபா விடுவிப்பு!

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று (15) வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இரு கட்டங்களின் கீழ் இந்த நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முதற்கட்டத்தின் கீழ் 1,012,812 பயனாளி குடும்பங்களுக்கு 9,357,346,250 ரூபா (கிட்டத்தட்ட 9.36 பில்லியன் ரூபா) நிதி இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 211,647 பயனாளி குடும்பங்களுக்கு 2,468,250,000 ரூபா (கிட்டத்தட்ட 2.47 பில்லியன் ரூபா) நிதி உரிய அஸ்வெசும வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இன்றைய தினத்தில் மாத்திரம் இவ்விரு கட்டங்களின் கீழும் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்காக 11,825,596,250 ரூபா (சுமார் 11.83 பில்லியன் ரூபா) அஸ்வெசும நலன்புரி நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link