மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மீண்டும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
ஈரான் நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய அரசியல் காரணிகள், இந்த விலை அதிகரிப்பிற்கு பிரதான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
உலக சந்தையின் தற்போதைய விலை நிலவரம்:
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய்: 0.86% உயர்ந்து பீப்பாய் ஒன்று 96.86 அமெரிக்க டொலராக விற்பனை.
- அமெரிக்க WTI மசகு எண்ணெய்: 0.85% அதிகரித்து பீப்பாய் ஒன்று 94.61 அமெரிக்க டொலராக உயர்வு.
- மேர்பன் (Murban) மசகு எண்ணெய்: 1.66% அதிகரித்து பீப்பாய் ஒன்று 96.09 டொலராகப் பதிவு.
- இயற்கை எரிவாயு (Natural Gas): உலக சந்தையில் இதன் விலை 3.171 அமெரிக்க டொலராக அதிகரிப்பு.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக, உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் தடங்கல்கள் ஏற்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.




