அமெரிக்க அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கிய TH-57 (Sea Ranger) ரக 10 ஹெலிகொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்த ஹெலிகொப்டர்களின் வருகையானது, இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியமானதொரு மைல்கல்லாகக் கருதப்படுவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், இது இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்கான பெறுமதியான பங்களிப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
🛠️ தற்போதைய நிலைவரம்: தற்போது இந்த 10 ஹெலிகொப்டர்களும் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் வைக்கப்பட்டு, தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சோதனைப் பறப்புகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னர், இந்த ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கை விமானப்படை சேவையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.




