உள்ளூர்

தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கிய ஊழியர்கள்

எம்பிலிப்பிட்டியாவில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் மற்றும் விபத்தின் போது வெளியேறிய நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாகவே தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 15 பேர் முதற்கட்டமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 22 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்ச பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக செவனகல தீயணைப்புத்துறையிலிருந்து அவசரமாகத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைக்கும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link