உள்ளூர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று கைது!

வாக்குமூலம் அளித்த பின் அதிரடித் திருப்பம்! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று கைது!

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (03 ஆம் திகதி ஜூலை மாதம் 2026) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை இலங்கைக் கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானிய கடற்படை அகடமியில் (Royal Naval Academy) அவருக்கு விசேட பயிற்சி அளித்தமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக வசந்த கரன்னாகொட இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

அங்கு அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டனர். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் அவர் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுவதை அவர் தவிர்த்திருந்த நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். கடற்படை உயர் பதவி மற்றும் சர்வதேசப் பயிற்சிகளை வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link