இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாகக் குறைப்பு! புதிய விலை விபரங்கள் இதோ!
சந்தையில் விற்பனை செய்யப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் (Litro Gas) விலைகளை இன்று (03) நள்ளிரவு முதல் கணிசமான அளவு குறைக்க லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
உலகச் சந்தை எரிவாயு விலை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:
- 12.5 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை காலம் 4,765 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,465 ரூபாய் ஆகும்.
- 5 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை காலம் 1,910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1,792 ரூபாய் ஆகும்.
- 2.3 கிலோகிராம் சிலிண்டர்: இதன் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 835 ரூபாய் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பானது இன்று (03) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



