உள்ளூர்

சுரேஷ் சலேயின் மனுவுக்கு நீதிமன்றம் விதித்த திகதி

சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் மற்றும் நாலக தேரர் இடையீட்டு மனுக்கள்! பரிசீலனைக்கான திகதி நிர்ணயம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாம் கைது செய்யப்படுவதற்கும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் சவால் விடுத்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை விசாரணை செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் குறித்த இடையீட்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இவ்வழக்கில் பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 8 தரப்பினர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டன. இதன்போது, மனுதாரர் சுரேஷ் சலே சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே இந்த இடையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய, இடையீட்டு மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், தொடர்புடைய மனுக்களை எதிர்வரும் ஒகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பரிசீலனைக்காக அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link