முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும், பேராசிரியருமான மைத்ரி விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இரண்டு வார காலஅவகாசம் கோரியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பயணத்தின் போது அரசாங்க நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த வாக்குமூலம் கோரப்பட்டிருந்தது


