உள்ளூர் செய்திகள்

இன்று முதல் அமுலாகும் புதிய QR எரிபொருள் ஒதுக்கீடு: வாகனங்களுக்கான முழுமையான விபரம் இதோ!

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய எரிபொருள் கையிருப்பு மற்றும் விநியோகச் சீரமைப்புகளைக் கருத்தில் கொண்டு, இன்று (15) ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கியூ ஆர் (QR) குறியீட்டு முறையின் கீழ் ஒவ்வொரு வாரமும் வாகனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவுகள் (Liters) பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன:

வாகன வகைவாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (L)
மோட்டார் சைக்கிள்கள்05 லீட்டர்
முச்சக்கர வண்டிகள்15 லீட்டர்
மோட்டார் கார்கள்15 லீட்டர்
வான்கள் (Vans)40 லீட்டர்
பஸ்கள் (Buses)60 லீட்டர்
லொறிகள் (Motor Lorries)200 லீட்டர்
விசேட தேவை வாகனங்கள்40 லீட்டர்
தரைவழி வாகனங்கள் (Land Vehicles)25 லீட்டர்

மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டுத் தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்குரிய ஒதுக்கீடுகளை அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் குறியீட்டைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds