ரானுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றினை அமெரிக்கப் படைகள் நடுக் கடலில் வைத்துச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தும் திட்டம் தமக்கு இல்லை என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (20) இரவு 11:10 மணி அளவில் ஈரானிய வெளியுறவு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

மத்திய கிழக்கு கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றினை, அமெரிக்காவின் CENTCOM படைகள் முற்றுகையிட்டுத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. குறித்த கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள போதிலும், அதனை ஈரான் முற்றாக மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்த வார இறுதியில் அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. “ஒருபுறம் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு, மறுபுறம் எமது கப்பல்களைக் கைப்பற்றுவது அமெரிக்காவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது” என ஈரான் சாடியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் மோதல் போக்கினால் ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் இன்று காலை குறைந்திருந்த எரிபொருள் விலை, இரவு வேளையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


