இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்த போதே ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு 14 எயார்பஸ் (A-330 மற்றும் A-350) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
- வாக்குமூலம்: தமக்குக் கிடைத்த இலஞ்சப் பணத்தில் 60 மில்லியன் ரூபாவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், 20 மில்லியன் ரூபாவை அப்போதைய அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன தெரிவித்ததாக ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
- அழைப்பு: இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இந்தத் தகவலை மறுத்துள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை அச்சுறுத்தியே இவ்வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றைத் தாக்கல் செய்துள்ளமை இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
- 🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
- 👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
- 📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)




