உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞருக்கு கௌரவம்!

யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய – இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் கலாநிதி எல். சுப்பிரமணியம் அவர்களின் தந்தையாரான பேராசிரியர் வி. லக்ஷமிநாராயணனை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் உடுவில் இராமநாதன் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீதி “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” என நேற்று (23) காலை உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் இந்நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்தியக் கலைஞர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் பங்கேற்பு: இந்நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் கலாநிதி எல். சுப்பிரமணியம், இந்தியாவின் பிரபல பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் இந்தியத் துணைத் தூதர் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

முக்கிய அதிகாரிகள் வருகை: மேலும், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதாநாயகன், யாழ். மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை கலைக் கழகத் தலைவர் கீர்த்தி வெலிசரகே உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும், நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பேராசிரியர் வி. லக்ஷமிநாராயணனின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பெயர்ப்பலகை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருப்பதாக நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link