உள்ளூர்

செப்டெம்பர் முதல் அனைத்துப் பேருந்துகளுக்கும் தரப் பரிசோதனை

செப்டெம்பர் முதல் அனைத்துப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கும் தரப் பரிசோதனை! வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அதிரடி!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

: இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு இயந்திர மற்றும் தரக் குறைபாடுகளுமே பிரதான காரணங்களாக அமைகின்றன என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தரப் பரிசோதனைகளுக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை முழுமையாக ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்த தலைவர், அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link