குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகக் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் போது காயமடைந்த மூவரும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் உடனடியாகச் சிகிச்சைக்காக அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவரும் ஆண்கள் என்றும், அவர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மின் தூக்கி (Elevator) பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் (Technicians) பணியாற்றி வந்தவர்கள் என்றும் இலங்கைத் தூதரகம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

