சென்னை: தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் தள்ளிப்போனதால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. அட்லி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் வரும் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ரீ-ரிலீஸ் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையரங்குகளில் விஜய்யின் ‘தெறி’த்தனமான வருகையைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்
.https://youtu.be/iQbBBOL2BBE?si=8MWv_zGWnuiux-7R
