ஸ்பெயின் தெற்கு பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தின் ஆடமுஸ் நகருக்கு அருகே, ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இரு அதிவேக ரயில்கள் தடம் புரண்டு மோதிய விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறைத் தகவல்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, மாலாகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற Iryo Freccia 1000 ரயிலின் ஒரு பகுதி தடம் புரண்டு, மாட்ரிட்–ஹூல்வா வழித்தடத்தில் சென்ற Renfe Alvia ரயிலுடன் மோதியதால், இரண்டாவது ரயில் தடம் விட்டு வழுக்கி சுமார் 4 மீட்டர் பள்ளத்தில் சரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 25 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு ரயில்களிலும் சேர்த்து 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், மீட்பு நடவடிக்கைகளில் அவசர சேவைகள் மற்றும் இராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன


