உள்ளூர் செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (ஜனவரி 24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் பயணித்த கார் ஒன்று, வீதியின் இடதுபுறத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் (Safety Barrier) மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த 30 மற்றும் 36 வயதுடைய இரண்டு ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds