இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் (Official Logo) இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” (Let’s Build Sri Lanka) என்ற மகுட வாசகத்தின் (Theme) கீழ் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.
இதற்கான பிரதான நிகழ்வுகள் வரும் 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் (Independence Square) நடைபெறவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


