Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உள்ளூர் செய்திகள்

மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ரமழான்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஈதுல் பித்ர் வாழ்த்து!

“ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் பயங்கரம்: பொதுக்கிணற்றில் உயிருக்குப் போராடிய நிலையில் பெண் மீட்பு – மற்றுமொரு சடலமும் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அதேவேளை, அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதன் பின்னணியில், மற்றுமொரு பெண்ணின் கொலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கியது

நாட்டில் நிலவிய எரிவாயு (LP Gas) தட்டுப்பாட்டு அபாயம் முற்றாக நீங்கியுள்ளதாக அரசாங்கம் மற்றும் லிட்ரோ (Litro) நிறுவனம் அறிவித்துள்ளன. மார்ச் மாதத்திற்குத் தேவையான 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (20) மேலும் ஒரு பாரிய எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன ஆகியோர் இது குறித்து விடுத்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: செய்தியின் முக்கிய விபரங்கள்:

உள்ளூர் செய்திகள் தொழில்நுட்பச் செய்திகள்

அந்த்ரோபிக் ஆய்வின் திடுக்கிடும்உஷார்! உங்கள் வேலை AI-

AI புரட்சி: உங்கள் வேலை பாதுகாப்பானதா? அந்த்ரோபிக் ஆய்வின் அதிரடித் தகவல்கள்! செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடுமா என்ற விவாதம் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பிரபல AI நிறுவனமான அந்த்ரோபிக் (Anthropic), சுமார் 170 மில்லியன் அமெரிக்க வேலைவாய்ப்புகளை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் சுவாரசியமான தரவுகள் இதோ: 1. AI-ஆல் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வேலைகள் (High Risk Jobs) இந்த ஆய்வின்படி, அறிவுசார்ந்த மற்றும் கணினி சார்ந்த […]

உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூரில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை: வஜிர அபேவர்தன விசேட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை ஒன்றின் பின்னர் தற்போது நலமுடன் தேறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தவிசாளர் வஜிர அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:📲 உடனடி அப்டேட்களுக்கு எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்:https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K #ELankaMirror #BreakingNews #SriLankaNews #RanilWickremesinghe அறுவை சிகிச்சை மற்றும் தற்போதைய நிலை:

உள்ளூர் செய்திகள்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு (Kumara Jayakody) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று (19) உத்தியோகபூர்வமாகச் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைச் சந்தித்து இந்தப் பிரேரணையை இன்று காலை கையளித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்கள்: அரசாங்கத்தின் நிலைப்பாடு: இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனாதிபதி […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கடி! கபில சந்திரசேனவின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன அரசியல் களம்

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன

உள்ளூர் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் புதிய மாற்றம்!

நாளை (19) முதல் அமுலாகும் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறை: உத்தியோகபூர்வ அறிவிப்பு! எரிபொருள் நிலையங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், விநியோகத்தைச் சீர்ப்படுத்தவும் நாளை (19) முதல் புதிய ‘ஒற்றை – இரட்டை’ (Odd-Even) இலக்க முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, உங்கள் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தைப் பொறுத்தே எரிபொருள் வழங்கப்படும். எரிபொருள் விநியோக அட்டவணை: நாள் / திகதி அனுமதிக்கப்பட்ட கடைசி இலக்கங்கள் வியாழக்கிழமை (மார்ச் 19) 1, 3, 5, 7, […]

உள்ளூர் செய்திகள்

இராணுவ வீரர்களுக்காக ஆழ்கடல் சுற்றுலா!

புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில், காலி கடற்பரப்பில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கான விசேட கடல் சுற்றுலா (Naval Excursion) ஒன்று கடந்த மார்ச் 04 ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, இராணுவ வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையில் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூர் செய்திகள்

தேர்தல் தள்ளிப்போகிறதா? பாராளுமன்றத்தில் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய அதிரடி கேள்வி

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளைக் காரணம் காட்டி, தேர்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைப்பதில் அரசாங்கம் குறியாக உள்ளதா?” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (17) பாராளுமன்றத்தில் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.