புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள்: கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலிருந்து […]


