Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

விளையாட்டு செய்திகள்

பல்லேகலவில் இன்று தீப்பறக்கும்! இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

2026 டி20 உலகக்கோப்பையின் மிக முக்கியமான கட்டமான சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில், இணை நடத்தும் நாடான இலங்கையும், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தும் இன்று (22) மோதுகின்றன. கண்டியின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் பல்லேகலவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இலங்கை 3-0 என இழந்திருந்தது. அந்தத் தோல்விக்குச் சொந்த மண் மற்றும் உள்ளூர் […]

கிழக்குக்கு இனிப்பான செய்தி: ‘மீனகயா’ இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!

ரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான “மீனகயா” (Meenagaya Night Mail) இரவு நேர புகையிரத சேவை, எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பயணிகளின் வசதிக்காக பின்வரும் கால அட்டவணையின் கீழ் சேவைகள் இடம்பெறவுள்ளன: புதிய நேர அட்டவணை: 1. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு (23.02.2026 முதல்): 2. மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு (24.02.2026 முதல்): மட்டக்களப்பு மார்க்கமான புகையிரத பாதைகள் […]

உள்ளூர் செய்திகள்

🚨 மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ‘டிலைட்’ எனும் வர்த்தகர் உயிரிழப்பு!

கந்தர, தெவுந்தர பகுதியில் பல்பொருங் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். டிலைட் என அழைக்கப்படும் 55 வயது வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபராக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். மோட்டார் வண்டியில் வந்த இருவர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

சிலாபத்தில் கடற்படையினரின் அதிரடி: 1400 கிலோ பீடி இலைகள் சிக்கின!

சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடற்படையினரும் கடலோர பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 1407 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் கட்டுரைகள்

மொழிகளின் சங்கமம்! இன்று சர்வதேச தாய்மொழி தினம்.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. 2000மாம் ஆண்டுக்கு பின்னர் அது உலகளவில் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. நிலையான சமூக கட்டியெழுப்பலுக்கு கலாசார மற்றும் பல் மொழி கலாசாரம் அத்தியாவசியமானதென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு தினத்தை கொண்டாடுவதற்கான முதல் யோசனையை பங்களாதேஸ் முன்வைத்திருந்தது. குறித்த நாடு தாய்மொழியை […]

உள்ளூர் செய்திகள்

🚨 நிலச்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட மக்கள் அவதானம்!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது. இன்று (21) காலை 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை காலை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள்

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வீட்டிலேயே வாக்குமூலம்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபா அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு சிஐடியினர் நேற்று (20) அழைப்பு விடுத்திருந்தனர்

விளையாட்டு செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!

பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி, மைதானத்தில் மட்டுமல்லாமல் ஒளிபரப்புத் துறையிலும் பிரம்மாண்டமான சாதனைகளைப் படைத்துள்ளது. பார்வையாளர் எண்ணிக்கை சாதனை: இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு பங்காளரான ஜியோஸ்டார் (JioStar) வெளியிட்டுள்ள தகவலின்படி:

உலகச் செய்திகள்

breaking news:டிரம்ப் விதித்த உலகளாவிய சுங்கங்கள் சட்டவிரோதம்

அமெரிக்க உச்ச நீதிமன்றம் 6–3 பெரும்பான்மை தீர்ப்பு வாஷிங்டன்: Supreme Court of the United States வெள்ளிக்கிழமை வெளியிட்ட முக்கிய தீர்ப்பில், முன்னாள் ஜனாதிபதி Donald Trump உலகம் முழுவதும் ஒருதலைப்பட்சமாக விதித்த பரந்த அளவிலான சுங்க வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறியவை என அறிவித்தது. முதன்மை நீதிபதி John Roberts எழுதிய பெரும்பான்மை தீர்ப்பில், ஜனாதிபதி சுங்கங்களை விதிக்க தெளிவான காங்கிரஸ் அனுமதி அவசியம் என வலியுறுத்தப்பட்டது. “அளவிலா மற்றும் காலவரையற்ற சுங்கங்களை விதிக்கும் […]

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: லிட்ரோ நிறுவனம் உறுதி

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள லிட்ரோ கேஸ் நிறுவனம், நாட்டில் போதிய கையிருப்பு இருப்பதாகவும் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.எரிவாயு தட்டுப்பாடு இல்லை: லிட்ரோ நிறுவனம் உறுதி