உலகின் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify, தனது சமூக அம்சங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் “Messages” பகுதியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் புதுப்பிப்பில் முக்கியமாக இடம்பெறுவது “Listening Activity” என்ற அம்சம்.
இந்த opt-in வசதியை இயக்கினால், Spotify Messages-ல் நீங்கள் தொடர்பில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் real-time-ல் எந்த பாடலை கேட்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். Spotify தெரிவிப்பின்படி, Listening Activity நீங்கள் ஏற்கனவே Messages-ல் உரையாடியுள்ள நபர்களிடமே பகிரப்படும்; மேலும், எந்த தொடர்புகள் உங்கள் activity-ஐ பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யவும் முடியும்.
எப்படி Enable செய்வது?
Spotify app → Settings → Privacy & Social பகுதியில்
“Listening activity” toggle-ஐ ON செய்ய வேண்டும். ON செய்ததும், இந்த தகவல் Messages chat-ன் மேற்பகுதியிலும் மற்றும் app-இன் sidebar/chat பகுதியிலும் காணப்படும்.
மேலும், நண்பரின் listening activity-யை tap செய்தால்:
- அந்த track-ஐ play செய்ய
- library-க்கு save/add செய்ய
- context menu திறக்க
- emoji reactions அனுப்ப
முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Request to Jam” என்ற புதிய வசதி கூட
Listening Activity-க்கு கூடுதலாக, Premium users Messages-லிருந்து நேரடியாக “Request to Jam” மூலம் live shared listening session தொடங்கலாம். Free users அழைப்பின் மூலம் join செய்ய முடியும். இந்த இரண்டு அம்சங்களும் Messages-enabled markets-ல் iOS/Android-க்கு rollout ஆகி, early February வரை பரவலாக கிடைக்கும் என Spotify தெரிவித்துள்ளது.

