அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான அறிக்கை
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் (kmph) வரை காணப்படும்.
எனினும், பின்வரும் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது:
- கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள்.
- மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலை முதல் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


