Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு IMF தொடர்ந்தும் ஆதரவு: சுவிட்சர்லாந்தில் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்ந்தும் வழங்கும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) மாநாட்டின் ஒரு அங்கமாக இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் இலங்கைப் பிரதமர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள்

மத விவகாரங்களில் கைவைக்க வேண்டாமென ஆட்சியாளர்களுக்கு ரணில் எச்சரிக்கை!

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் தொன்மையைப் பேணுவதற்கும் அரசியலமைப்பு ரீதியாகக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது, அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார். […]

இலங்கையில் வாகன விலைகள் அதிரடியாக வீழ்ச்சி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, புதிய வாகனங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் (Used Vehicles) விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த சில வருடங்களாக நிலவிய செயற்கையான விலை உயர்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, இந்தத் திடீர் விலை மாற்றத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன: சந்தை சமநிலை: இறக்குமதி கட்டுப்பாடுகளால் அதிகரித்திருந்த வாகனங்களின் விலை, தற்போது விநியோகம் சீரானதால் […]

உள்ளூர் செய்திகள்

தரம் 6 சர்ச்சை எதிரொலியாக உயர்மட்ட அதிகாரிகள் பணிநீக்கம்!

இலங்கையின் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக, அரசாங்கம் இன்று கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மூன்று முக்கிய அதிகாரிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுரவின் வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளன? ‘அனுர மீட்டர்’ வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான ஆய்வு அறிக்கை

வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள மிக முக்கியமான 30 வாக்குறுதிகளைத் தெரிவு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டது. 2025 நவம்பர் மற்றும் 2026 ஆரம்பப்பகுதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் அதன் முடிவுகள் வருமாறு:

விளையாட்டு செய்திகள்

இலங்கை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி:

இலங்கை அணியுடனான விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று (19) காலை நாட்டை வந்தடைந்தது. துபாயிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானம் மூலம் இன்று காலை 08:20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) மற்றும் இருபதுக்கு 20 (T20) தொடர்கள் நடைபெறவுள்ளன. […]

உலகச் செய்திகள்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து: தடம் புரண்டு மோதியதில் 21 பலி

ஸ்பெயின் தெற்கு பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தின் ஆடமுஸ் நகருக்கு அருகே, ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இரு அதிவேக ரயில்கள் தடம் புரண்டு மோதிய விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறைத் தகவல்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ராய்ட்டர்ஸ் தகவலின்படி, மாலாகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற Iryo Freccia 1000 ரயிலின் ஒரு பகுதி தடம் புரண்டு, மாட்ரிட்–ஹூல்வா வழித்தடத்தில் சென்ற Renfe Alvia ரயிலுடன் மோதியதால், இரண்டாவது ரயில் […]

சினிமா

ஜனநாயகன் வரவில்லை என்றால் என்ன? ‘விஜய் குமார்’ வர்றார் – தெறி ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்

சென்னை: தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் தள்ளிப்போனதால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. அட்லி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் வரும் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். […]

உள்ளூர் செய்திகள்

நாட்டிற்குள் கடத்தப்பட்ட 617 கிலோ பீடி இலைகள் கல்பிட்டியில் சிக்கியது

இலங்கை கடற்படையினரும் கல்பிட்டி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 617 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்பிட்டி, குடாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வண்டி ஒன்றை வழிமறித்துச் சோதனை செய்தபோது, விநியோகத்திற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த பீடி இலைகள் கண்டறியப்பட்டன. வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ நிறுவனத்தைச் சேர்ந்த வீரர்களே இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பீடி […]

உள்ளூர் செய்திகள்

2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க தீவிலிருந்து சுரனிமில கப்பல் புறப்பட்டது

இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க இன்று (2026 ஜனவரி 14) கொழும்பு துறைமுகத்திலிருந்து மாலைத்தீவின் தலைநகரான மாலேவுக்குப் புறப்பட்டது. அதன்படி, 2026 ஜனவரி மாதம் 16 முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேயில் நடைபெறும் இந்தக் கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில பங்கேற்பது மூலம், இலங்கை, இந்தியா மற்றும் […]