இலங்கை அணியுடனான விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று (19) காலை நாட்டை வந்தடைந்தது.
துபாயிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானம் மூலம் இன்று காலை 08:20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) மற்றும் இருபதுக்கு 20 (T20) தொடர்கள் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடர் (ODI Series) – கொழும்பு: அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
- 1வது போட்டி: ஜனவரி 22
- 2வது போட்டி: ஜனவரி 24
- 3வது போட்டி: ஜனவரி 27
T20 தொடர் – பல்லேகலை: T20 போட்டிகள் அனைத்தும் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
- 1வது போட்டி: ஜனவரி 30
- 2வது போட்டி: பெப்ரவரி 01
- 3வது போட்டி: பெப்ரவரி 03
வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


