Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த முக்கிய தமிழ் தலைவர்கள்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ELankaMirror […]

உலகச் செய்திகள்

📌 ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த இறுதி எச்சரிக்கை!

ஈரானுடனான போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், “ஈரான் முன் எப்போதும் கண்டிராத வகையிலான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்” என வெள்ளை மாளிகை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதலை நிறுத்த 15 நிபந்தனைகள் அடங்கிய போர்நிறுத்த முன்மொழிவை வெளியிட்டிருந்தார். இந்த நிபந்தனைகளை ஈரான் முழுமையாக […]

உள்ளூர் செய்திகள்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்திச் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்கான அடிப்படை நிபந்தனைகள்: புதிய வழிகாட்டுதலின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை பின்வரும் காரணிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே […]

உலகச் செய்திகள்

ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியது அமெரிக்கா

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு பகுதியாக, ஈரானுக்கு மிகவும் முக்கியமான ஒரு சலுகையை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தச் சலுகை என்ன என்பது குறித்த விபரங்களை அவர் […]

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் அபாயம்

நாட்டின் சில மாகாணங்களில் இன்று (25) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: மழை பெய்யக்கூடிய பகுதிகள்: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் […]

உள்ளூர் செய்திகள்

மயானத்தில் நடந்த மர்மத் திருட்டு முயற்சி

மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானத்தில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த நகைகளைத் திருடுவதற்காகக் கல்லறையைத் தோண்டிய மயானக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மயானக் காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த 15-ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் ஏழாம் நாள் நினைவுச் சடங்குகள் நேற்று (22) நடைபெற்ற நிலையில், அவரது […]

உள்ளூர் செய்திகள்

நாளை முதல் பேருந்து கட்டணங்கள் 12.19% ஆல் அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, நாடு தழுவிய ரீதியில் பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய கட்டணத் திருத்தம் நாளை (மார்ச் 24, 2026) நள்ளிரவு 12:01 மணி முதல் அமுலுக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது. கட்டணத் திருத்தத்தின் முக்கிய விபரங்கள்: கட்டண உயர்வுக்கான காரணம்: கடந்த மார்ச் 22 ஆம் திகதி லங்கா வெள்ளை டீசல் (Lanka White Diesel) […]

உள்ளூர் செய்திகள்

📢 வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் செய்தி: QR எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் எரிபொருள் விநியோக நடைமுறையில் முக்கிய மாற்றமொன்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, QR குறியீட்டின் கீழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய எரிபொருள் ஒதுக்கீடு விபரங்கள் (லீற்றரில்): பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அட்டவணையின்படி திருத்தப்பட்ட புதிய அளவுகள் வருமாறு: வாகன […]

உள்ளூர் செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாது: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர விபரிப்பு

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விலை அதிகரிக்கப்படாவிட்டால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 43 சதவீத பங்களிப்பை வழங்கும் தனியார் துறை விநியோகத்தை நிறுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

சகோதரத்துவமே இலங்கையின் பலம்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஈதுல் பித்ர் வாழ்த்து!

இலங்கையில் நிலவும் பன்முகத்தன்மை எமக்கு ஒரு பலமாகும். ரமழான் பெருநாள் கற்றுத்தரும் சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு, எம்மை ஒரே கொடியின் கீழ் அணிதிரள ஊக்குவிக்கிறது” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் பக்திபூர்வமாகக் கொண்டாடும் ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் […]