உள்ளூர் செய்திகள்

📢 வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் செய்தி: QR எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் எரிபொருள் விநியோக நடைமுறையில் முக்கிய மாற்றமொன்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, QR குறியீட்டின் கீழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் ஒதுக்கீடு விபரங்கள் (லீற்றரில்):

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அட்டவணையின்படி திருத்தப்பட்ட புதிய அளவுகள் வருமாறு:

வாகன வகைமுன்னர் வழங்கப்பட்ட அளவுபுதிய எரிபொருள் அளவுஅதிகரித்த அளவு
மோட்டார் கார் (Car)152510
முச்சக்கர வண்டி (3Wheel)15205
வேன் (Van)405010
பஸ் (Bus)6010040
மோட்டார் பைக் (Bike)583
தரை வாகனங்கள் (Land Vehicle)254015
Quadricycle583

லொறி (200L) மற்றும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கான (40L) ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து