Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உள்ளூர் செய்திகள்

சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்க மைத்ரி விக்ரமசிங்க காலஅவகாசம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியும், பேராசிரியருமான மைத்ரி விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இரண்டு வார காலஅவகாசம் கோரியுள்ளார். சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பயணத்தின் போது அரசாங்க நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த வாக்குமூலம் கோரப்பட்டிருந்தது

உள்ளூர் செய்திகள்

புனித ரமழான் ஆரம்பம்!

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் தமது புனித ரமழான் நோன்பினை இன்று (19) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர். ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நேற்று (18) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள்

tamilNewsSriLanka:இலங்கை அணிக்கு பேரிடி! டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மதீஷ பத்திரண விலகல்?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விலகலுக்கான காரணம்: அவுஸ்திரேலிய அணியுடனான விறுவிறுப்பான போட்டியின் போது பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த மதீஷ பத்திரணவின் இடது காலில் (Left Leg) தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளின்படி, அவர் இந்தக் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வரச் சில வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், இந்தத் […]

உள்ளூர் செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கூலிப்படைக்கு உதவிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இக்கொலைத் திட்டம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவகமுவ பகுதியைச் சேர்ந்த நதுன் கவிஷ (20) மற்றும் சனோஜ் கோகில (24) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவையில் வைத்து […]

உள்ளூர் செய்திகள் கல்வி

அனர்த்தங்களால் ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகை!

ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது:

உள்ளூர் செய்திகள் கல்வி

சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நாளை (பெப்ரவரி 17) முதல் ஆரம்பமாகவுள்ளன.

விளையாட்டு செய்திகள்

sports news update:பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு மிச்சமிருக்கா?

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மகா யுத்தத்தில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியினால் பாகிஸ்தான் அணி குரூப் ‘A’ புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், அவர்களது ‘சூப்பர் 8’ கனவு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது குரூப் ‘A’ பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாம் இடத்தில் 4 புள்ளிகளுடன் அமெரிக்கா […]

உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பச் செய்திகள்

Technology News (தொழில்நுட்பம்)  :AI கேலிச்சித்திரங்களுக்கு பின்னால் பதுங்கியிருக்கும் ஆபத்து

முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் தற்போது எங்கு பார்த்தாலும் வண்ணமயமான AI கேலிச்சித்திரங்கள் (AI Caricatures) ஆக்கிரமித்துள்ளன. ஒரு வழக்கறிஞர் கையில் சட்டப் புத்தகத்துடன் இருப்பது போன்றோ அல்லது ஒரு பொறியியலாளர் தனது உபகரணங்களுடன் இருப்பது போன்றோ உருவாக்கப்படும் இந்த “Personalized Digital Caricature” படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால், இந்த ஒரு நிமிட வேடிக்கை உங்கள் வாழ்நாள் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக முடியலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர் ஹரித தனநாயக்க எச்சரிக்கிறார். உயிரியல் […]

உள்ளூர் செய்திகள்

ஜிந்துப்பிட்டியவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி. 🔴 மேலதிக விபரங்களுக்கு எமது செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.

உள்ளூர் செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா நகரம், கந்தபளை, நானுஓயா மற்றும் லிந்துலை போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் வீதிகளில் சில அடி தூரத்திற்கு அப்பால் உள்ள காட்சிகளைக்கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை வீதிகளில் நிலவும் தெளிவற்ற காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட போக்குவரத்துப் பொலிஸார், சாரதிகளுக்குப் […]