இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் தமது புனித ரமழான் நோன்பினை இன்று (19) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நேற்று (18) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.



