உள்ளூர் செய்திகள்

சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பமாகின்றன.

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுப்பதற்காக 325 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையின்படி, இன்று (12) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்: பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட ஏற்பாடுகள்: சமீபத்திய அனர்த்த நிலைமையினால் அடையாள அட்டைகள் அல்லது ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய மாணவர்கள் எவ்வித பாதிப்புமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து