டிட்வா’ (Ditwah) அனர்த்தத்தினால் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரதப் பாதைகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் இந்திய அரசின் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் ஆரம்பமாகியுள்ளன.
புகையிரதங்களை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதை நோக்கமாகக் கொண்டு, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நவீனமயமாக்கல் திட்டம், சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் இப்பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.
யானைகளுக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்து புகையிரதப் பாலங்கள் மற்றும் ஒரு நிலத்தடிப் பாதை (Underpass) என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கு, குறிப்பாக காட்டு யானைகளின் பாதுகாப்பான கடவைக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த கட்டுமானங்கள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் வடபகுதிக்கான புகையிரதப் போக்குவரத்து மேலும் விரைவானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


