ரூபாய் 200,000/- பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவர் இந்தப் பணத்தைக் கோரியதாகத் தெரியவருகிறது. ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விரிக்கப்பட்ட இரகசியப் பொறியில் சிக்கிய அவர், தற்சமயம் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

