கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (15) காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
- மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஒரு கடையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
- தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது காயமடைந்தோர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

